Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, March 10, 2014

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர் மன்றத்தின் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் மன்றம் 10 ஆவது தடைவையாக  நடத்திய  சினேகபூர்வ மென்பந்து சுற்றுப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை  (9-3-2014) காலை நீர்கொழும்பு கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் மன்றத்தின் தலைவரும் மாநகர சபை உறுப்பனருமான சதீஸ் மோகன்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேல் மாகாண முன்னாள் அமைச்சர் நிமல்லான்ஸா பிரதம விருந்தினராகவும், கல்லூரி அதிபர்  செல்வி. எஸ். நாகராணி, முன்னாள் அதிபர் என். கணேசலிங்கம், திரு. பாரத் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.





இந்த  சுற்றுப் போட்டியில்; Yorkshire அணி வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது. இரண்டாமிடத்தை " Trophy Fighters - B " அணி பெற்றுக் கொண்டது.








ஆட்ட நாயகனாகவும் சுற்றுப் போட்டியின் சிறப்பாட்டக்காரனாகவும்   ;; Yorkshire அணியைச் சேர்ந்த  ஆர். ரெமோசன் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த துடுப்பாட்டக்காரராக  Trophy Fighters - B    ஐ சேர்ந்த பி.மோசஸ் டேவிட்சனும், சிறந்த பந்து வீச்சாளராக Trophy Fighters - B   ஐ சேர்ந்த ஜே. விமல்நாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
















வெற்றி பெற்ற  சாம்பியன் அணிக்கு கல்லூரியின்  உதவி அதிபர் எம். முனவ்வர் வெற்றிக் கிண்ணத்தை வழங்கினார். முன்னாள் அதிபர் கணேசலிங்கம்  இரண்டாமிடம் பெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணத்தை வழங்கினார். நிகழ்வில்  வினோத உடைப் போட்டியில் வெற்றி பெற்ற பழைய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.







No comments:

Post a Comment